உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / 4ம் தேதி ஓட்டு எண்ணிக்கை 1,000 போலீசார் பாதுகாப்பு

4ம் தேதி ஓட்டு எண்ணிக்கை 1,000 போலீசார் பாதுகாப்பு

கோவை;லோக்சபா தேர்தல் தமிழகத்தில் கடந்த மாதம், 19ம் தேதி நடைபெற்றது. மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கோவை தொகுதிக்கு அரசு தொழில்நுட்ப கல்லுாரி வளாகத்திலும், பொள்ளாச்சி தொகுதிக்கு பொள்ளாச்சி தனியார் கல்லுாரியிலும், பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளன.இங்கு, 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு, 24 மணி நேரமும் கண்காணிப்பு கேமராக்கள் வாயிலாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. வரும் 4ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது.கோவை மாவட்டத்தில் ஓட்டு எண்ணும் பணியில், 706 ஊழியர்கள் ஈடுபடுகின்றனர். ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் நாளில், அசம்பாவிதங்களை தடுக்க, கோவை மற்றும் பொள்ளாச்சியில், 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை