உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

பெ.நா.பாளையம்;துடியலூர் அருகே மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்தார்.இடிகரை, மணிகாரம்பாளையத்தில் வசித்தவர் திருநாவுக்கரசு, 38; தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தவர். நேற்று துடியலுார் வெள்ளக்கிணறு பிரிவு அருகே குடியிருப்பு பகுதியில் தனியார் இன்டர்நெட் கேபிள் இணைப்பு பணியில் ஈடுபட்டார். அப்போது அருகே இருந்த மின் கம்பத்தின் ஒயர் திருநாவுக்கரசு மீது எதிர்பாராத விதமாக பட்டது. இதில் திருநாவுக்கரசு உடல் கருகி, அதே இடத்தில் உயிரிழந்தார். துடியலூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை