உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / திறந்தவெளி இறைச்சி கடைகளுக்கு கடிவாளம்: துாசு படாமல் இருக்க கண்ணாடி திரை அமைக்க உத்தரவு

திறந்தவெளி இறைச்சி கடைகளுக்கு கடிவாளம்: துாசு படாமல் இருக்க கண்ணாடி திரை அமைக்க உத்தரவு

கோவை;திறந்தவெளி இறைச்சிக்கடைகளால், புற்றுநோய் பாதிப்பு அபாயம் உள்ளதாக, நமது நாளிதழில் வெளியான செய்தியையடுத்து, சுகாதார விதிகளை கடைபிடிக்க, கடைகளுக்கு 'நோட்டீஸ்' வழங்கப்பட்டுள்ளது.மாநகராட்சி பகுதிகளில், சுகாதார விதிகளுக்கு மாறாக இறைச்சி விற்பதுடன், உரிமம் இல்லாமல் ஏராளமான கடைகள் விதிமீறி செயல்பட்டு வருகின்றன.மாநகராட்சி சார்பில் உக்கடம், சத்தி ரோடு, போத்தனுார் பகுதிகளில் செயல்படும் அறுவை மனைகளில் ஆடு, மாடுகளை வதை செய்து இறைச்சிகளுக்கு, 'சீல்' வைத்து எடுத்து சென்று சுகாதாரமான முறையில் விற்பனை செய்ய வேண்டும்.ஆனால், இறைச்சி கடைகளில் திறந்த வெளியில் ஆடு, கோழி உள்ளிட்டவை அறுக்கப்படுகின்றன. திறந்த வெளியில் வெட்டப்படும் இறைச்சிகளில் துாசி, வாகன புகையால் மாற்றம் ஏற்பட்டு, அவற்றை உண்பவர்களுக்கு, புற்றுநோய் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது.இதுகுறித்து, 'தொங்குது இறைச்'சீ' 'என்ற தலைப்பில், நமது நாளிதழில் கடந்த, 20ம் தேதி செய்தி வெளியானது. இதையடுத்து, சுகாதார விதிகளின்படி இறைச்சி விற்பனை செய்யுமாறு அந்தந்த மண்டல சுகாதார அலுவலர்கள் தரப்பில் இருந்து, இறைச்சி கடைகளுக்கு 'நோட்டீஸ்' வழங்கப்பட்டுள்ளது.மாநகராட்சி சுகாதார பிரிவு அதிகாரி ஒருவர் கூறியதாவது:சுந்தராபுரம், ஆத்துப்பாலம், உக்கடம், ஆர்.எஸ்.புரம் என மாநகராட்சியில் பல்வேறு பகுதிகளில், திறந்த வெளியில் செயல்பட்டு வந்த இறைச்சி கடைகளுக்கு, கண்ணாடி திரை அமைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.கடை உரிமையாளர்கள் கோரிக்கையின்படி, 10 நாள் கால அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது. அதுவரை கடைகள் செயல்படக்கூடாது. ஆத்துப்பாலத்தில், 12 கடை உரிமையாளர்கள் உடனடியாக கண்ணாடி திரை அமைத்துவிட்டனர்.சுந்தராபுரத்தில் எச்சரிக்கையையும் மீறி, திறந்த வெளியில் இறைச்சி விற்றவருக்கு ரூ.2,000 அபராதம் விதிக்கப்பட்டது. மற்ற இடங்களிலும், சுகாதார ஆய்வாளர்கள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.சுகாதார விதிகளை பின்பற்றாத, இறைச்சி கடைகளுக்கு முதலில் அபராதம் விதிக்கப்படும். தொடர் விதிமீறலில் ஈடுபட்டால், இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டு, கடைகளுக்கு 'சீல்' வைக்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.

அலட்சியம்!

ஒண்டிப்புதுார் மேம்பாலத்தை ஒட்டிய பகுதிகள், வசந்தாமில், மசக்காளிபாளையம் உள்ளிட்ட இடங்களில் திறந்த வெளியில் இறைச்சி விற்பனை இன்றும் தொடர்கிறது. இதுபோன்ற விடுபட்ட இடங்களிலும், சுகாதார பிரிவினர் கண்காணித்து கடிவாளம் போட வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை