உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாவட்ட கால்பந்து சங்க தேர்தல் நடத்த எதிர்ப்பு

மாவட்ட கால்பந்து சங்க தேர்தல் நடத்த எதிர்ப்பு

போத்தனூர்; கோவை மாவட்ட கால்பந்து சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்தலை நடத்த, எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.கோவை மாவட்ட கால்பந்து சங்கத்தின் நிர்வாகிகள் தேர்தல் கடந்த, 2023, ஆக., மாதம் நடந்தது. செயலாளராக கிருஷ்ணமூர்த்தி, இணை செயலாளராக சந்திரகுமார், பொருளாளராக சீனிவாசன் உள்ளிட்டோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.இதற்கு உறுப்பினர்களில் சிலர் எதிர்ப்பு தெரிவித்து, ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை தேர்தல் நடந்த மாவட்டத்திலுள்ள கோர்ட்டில் தொடர, ஐகோர்ட் அறிவுறுத்தியது. தேர்தலை நடத்த முடிவு செய்தபோது, மேற்குறிப்பிட்ட நிர்வாகிகள் வழக்கு குறித்து கூறியுள்ளனர். இதையடுத்து, தேர்தல் நடத்தும் நடவடிக்கை நிறுத்தப்பட்டது. இச்சூழலில், முன்னாள் நீதிபதி ராஜ் தேர்தல் நடத்தும் அதிகாரியாக நியமிக்கப்பட்டு, கடந்த வாரம் அதற்கான அறிவிப்பை வெளியிட்டார். போட்டியிடுவோர் விபரம், நேற்று முன் தினம் கோவைபுதூரிலுள்ள ஒரு திருமண மண்டபத்தில் வைத்து அறிவிக்கப்படும் என, உறுப்பினர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று கூட்டம் துவங்கியதும், தேர்வான மூவரும் மீண்டும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களை வெளியே செல்ல அறிவுறுத்தப்பட்ட பின்னர், வேட்பு மனு தாக்கல் செய்தோர் விபரம் அறிவிக்கப்பட்டது. செயலாளர் கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், ''நாங்கள் நிர்வாகிகளாக உள்ள நிலையில், புதிய நிர்வாகிகளுக்கான தேர்தலை நடத்த முயற்சிக்கின்றனர். ஐகோர்ட்டில் வழக்கு உள்ளதை கூறியபோதும் ஏற்றுக்கொள்ள மறுத்து, ஒரு சிலருக்கு சாதகமாக நடக்கின்றனர், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !