உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பண்ணாரி மாரியம்மன் கோவில் திருவிழா  மேள தாளத்துடன் வந்தது சக்தி கரக ஊர்வலம் 

பண்ணாரி மாரியம்மன் கோவில் திருவிழா  மேள தாளத்துடன் வந்தது சக்தி கரக ஊர்வலம் 

கோவை, : புலியகுளம் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவில், 41ம் ஆண்டு திருக்கல்யாண திருவிழா நேற்று பக்தர்கள் புடைசூழ விமரிசையாக நடந்தது. கடந்த ஏப்.,23 அன்று கோவில் வளாகத்தில் முகூர்த்தகால் நடப்பட்டு கொடியேற்றம் செய்யப்பட்டது. ஏப்.,30 அன்று அக்னிச்சாட்டுதலும், மே 3 அன்று திருவிளக்கு பூஜையும், மே.,5 அன்று தீர்த்தக்குடம் எடுத்தலும் நடந்தது. மே 7 அன்று திருக்கல்யாணமும் நடந்தது.நேற்று புலியகுளத்திலிருந்து பங்கஜாமில் சாலையிலுள்ள பெரியார் நகர் வரை சக்திகரகம் அழைத்துவரப்பட்டது. உடுக்கையடிஉற்சவமும், ஜமாப் இசையும், மேளதாளங்களும் அரங்கேறியது. பக்தர்கள் புடைசூழ கோவிலுக்கு சக்தி கரகம் அழைத்து வரப்பட்டது. இன்று இரவு 9:00 மணிக்கு அம்மன் திருவீதி உலாவும், 10:00 மணிக்கு மஞ்சள்நீராடுதலும் அபிஷே க பூஜைகளும் நடந்தன. விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு மற்றும் பண்ணாரி மாரியம்மன், ஸ்ரீ சக்தி விநாயகர் கோவில் கமிட்டியர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை