உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நகரில் போக்குவரத்து நெரிசல்: தீர்வு காண மக்கள் வலியுறுத்தல்

நகரில் போக்குவரத்து நெரிசல்: தீர்வு காண மக்கள் வலியுறுத்தல்

பொள்ளாச்சி:பொள்ளாச்சி நகரில், அடிக்கடி ஏற்படும் போக்குவரத்து நெரிசலால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.பொள்ளாச்சி நகரம், கோவை மற்றும் கேரளா மாநிலத்துக்கு செல்லும் முக்கிய வழித்தடமாக உள்ளதால், தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன. மேலும், நகரில், வணிக நிறுவனங்கள் அதிகளவு உள்ளதால் மக்கள் கூட்டமும் அதிகரித்து காணப்படுகிறது.நகரில் நெரிசலை தவிர்க்க ரோடுகள் விரிவாக்கம் செய்யப்பட்டு, ரோடு சந்திப்பு பகுதிகளில், 'ரவுண்டானா' அமைக்கப்பட்டது. இதன்பின், நெரிசல் குறையும் என எதிர்பார்த்தால், நெரிசல் மேலும் அதிகரித்து மக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது.பொதுமக்கள் கூறியதாவது:பொள்ளாச்சி நகரில், நெரிசலை தவிர்க்க, ரோடு விரிவாக்க திட்டங்களை செயல்படுத்தினாலும் பிரச்னைக்கு தீர்வு இல்லை. ரவுண்டானா பகுதியில் வாகனங்கள் எவ்வாறு செல்ல வேண்டும் என்பதற்கான வழிமுறைகள் எதுவும் பின்பற்றப்படுவதில்லை.இதனால், நான்கு பக்கத்தில் இருந்து வரும் வாகனங்கள், செல்ல முடியாமல் நிற்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், அவசரமாக செல்லும் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.மேலும், 'நோ பார்க்கிங்' பகுதியில் வாகனங்கள் நிறுத்தம், நடைபாதைகள் ஆக்கிரமிப்பு போன்ற காரணங்களால் நெரிசல் ஏற்படுகிறது.எனவே, அதிகாரிகள் ஆய்வு செய்து, இப்பிரச்னைக்கு உரிய தீர்வு காண வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை