உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பைக்குகளில் பெட்ரோல் திருட்டு; ரயில்வே ஸ்டேஷனில் கைவரிசை

பைக்குகளில் பெட்ரோல் திருட்டு; ரயில்வே ஸ்டேஷனில் கைவரிசை

கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு, ரயில்வே ஸ்டேஷன் 'பார்க்கிங்' பகுதியில், பைக்குகளில் மர்ம நபர்கள் பெட்ரோல் திருடுகின்றனர்.கிணத்துக்கடவு ரயில்வே ஸ்டேஷனுக்கு வரும் பயணியர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஒரு சில பயணியர் காலை நேரத்தில் ரயில்வே ஸ்டேஷனில் உள்ள பார்க்கிங் ஏரியாவில், பைக்குகளை நிறுத்திச்செல்கின்றனர்.இரவு நேரத்தில் வந்து, பைக் எடுத்துச் செல்லும்போது ஒரு சில பைக்குகளில் பெட்ரோல் குறைவாகவும், சில பைக்குகளில் பெட்ரோல் முழுவதுமாக திருடப்படுவதையும் உறுதி செய்தனர்.இதனால், ரயில்வே ஸ்டேஷனில் பைக்குகளை 'பார்க்கிங்' செய்ய பயணியர் அச்சப்படுகின்றனர். இதுகுறித்து ரயில்வே நிர்வாகத்திடம் பயணியர் புகார் அளித்துள்ளனர்.மேலும், இது போன்ற செயல்களை தடுக்க வாகனங்கள் 'பார்க்கிங்' செய்யும் இடத்தில் சி.சி.டி.வி., கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.பயணியர் கூறுகையில், 'தினமும் வேலைக்கு செல்ல ரயில்வே ஸ்டேஷனில் உள்ள 'பார்க்கிங்' பகுதியில், பைக்கை நிறுத்தி செல்கிறோம். கடந்த ஒரு வாரமாக, பைக்கில் பெட்ரோல் திருடுவது தொடர்ந்து நடக்கிறது.இதனால், பெட்ரோல் தீர்ந்து பைக் நடுவழியில் நின்று விடுகிறது. நீண்ட துாரத்துக்கு பைக்கை தள்ளிச்செல்லும் நிலை ஏற்படுகிறது. எனவே, பெட்ரோல் திருடும் நபர்களை கண்காணித்து, போலீசார் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை