உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / குழாய் உடைப்பு சரிபார்ப்பு; பேட்ச் ஒர்க் எதிர்பார்ப்பு

குழாய் உடைப்பு சரிபார்ப்பு; பேட்ச் ஒர்க் எதிர்பார்ப்பு

கோவை;சரவணம்பட்டி அருகே, சின்னவேடம்பட்டி மெயின் ரோட்டில் பில்லுார்-3 குடிநீர் திட்ட குழாய் உடைந்து குடிநீர் வீணாகி வந்தது.தற்போது மழை பெய்துவரும் நிலையில், இதனால் ஏற்பட்ட குழி பெரிதாகி தினமும் இருசக்கர வாகனங்கள் விபத்துக்குள்ளாகி வருகின்றன. இதுகுறித்த செய்தி நமது நாளிதழில் நேற்று முன்தினம் வெளியானது. இதையடுத்து, குழாய் உடைப்பு சரி செய்யும் பணியில் மாநகராட்சி பணியாளர்கள் நேற்று ஈடுபட்டனர்.அப்பகுதி மக்கள் கூறுகையில், 'குழாய் உடைப்பை சரி செய்வதுடன் உடனடியாக, 'பேட்ச் ஒர்க்' செய்ய வேண்டும். இந்த இடத்தில் மின் விளக்குகளும் எரியாததால் இரவு நேரங்களில் தொடர்ந்து விபத்து நடக்கிறது. மின் விளக்கு பிரச்னையையும் தாமதமின்றி சரி செய்ய வேண்டும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி