உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நடைபாதையை ஆக்கிரத்துள்ள குழாய்கள்; விபத்து அபாயம் மாற்றி அமைக்க கோரிக்கை மாற்றி அமைக்க பொது மக்கள் கோரிக்கை

நடைபாதையை ஆக்கிரத்துள்ள குழாய்கள்; விபத்து அபாயம் மாற்றி அமைக்க கோரிக்கை மாற்றி அமைக்க பொது மக்கள் கோரிக்கை

பெ.நா.பாளையம்:பெரியநாயக்கன்பாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகே மேம்பாலத்தின் கீழ் உள்ள பாலத்தின் நடைபாதையில் குடிநீர் திட்ட குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் நடந்து செல்ல பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் விபத்து அபாயம் என்ற நிலை உருவாகியுள்ளது.காரமடை அருகே உள்ள அத்திக்கடவு மற்றும் பில்லூர் குடிநீர் திட்ட குழாய்களான வடவள்ளி, கவுண்டம்பாளையம் கூட்டு குடிநீர் திட்டம், தொண்டாமுத்தூர் குடிநீர் திட்டம், பில்லூர் குடிநீர் திட்ட குழாய்கள் பெரியநாயக்கன்பாளையத்தை கடந்து செல்கின்றன.இவை பெரியநாயக்கன்பாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள பாலத்தின் நடைபாதையை ஆக்கிரமித்து செல்வதால், பொதுமக்களுக்கு பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது.பெரியநாயக்கன்பாளையம் மேம்பாலம் கட்டுமான பணியின் போது, குடிநீர் திட்ட குழாய்கள் மாற்றி அமைக்கப்பட்டன. அவை பெரியநாயக்கன்பாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள பாலத்தின் இரு பக்கங்களிலும், பொதுமக்கள் பாதுகாப்பாக செல்ல அமைக்கப்பட்ட நடைபாதைகளை ஆக்கிரமித்து கொண்டு செல்லப்பட்டன. பொதுமக்கள் செல்ல அமைக்கப்பட்ட நடைபாதைகள், இப்போது குடிநீர் திட்ட குழாய்களை சுமந்து நிற்கிறது. இதனால் அதிவேகமாக பாலத்தில் வரும் வாகனங்கள் இடையே பொதுமக்கள் நடந்து செல்ல வேண்டிய அபாயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து, பொதுமக்கள் கூறுகையில்,' நடைபாதையில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாயில் அடிக்கடி வெடிப்புகள் ஏற்பட்டு நீர் பீய்ச்சி அடிக்கிறது. நடைபாதையில் குடிநீர் குழாய் அமைக்கப்பட்டுள்ளதால், பாலத்தை கடக்கும் பொதுமக்கள், வாகனங்கள் வரும் பாதையில் நடந்து செல்ல வேண்டி உள்ளது.பெரியநாயக்கன்பாளையம் பஸ் ஸ்டாண்ட் நோக்கி பொதுமக்கள் வரும் பாதையில் உள்ள பாலத்தில் இந்நிலை நீடிப்பதால், பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகிறார்கள். பெரும் விபத்துக்கள் ஏற்படுவதற்கு முன் குடிநீர் திட்ட குழாய்களை பாலத்தின் கீழ் பகுதிக்கு மாற்றி அமைக்க வேண்டியது அவசிய அவசரம்' என்றனர்.இது குறித்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தினர் கூறுகையில், 'இது குறித்து உரிய ஆய்வு நடத்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை