உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பிளஸ் 2 விடைத்தாள் ஏப்., 1 முதல் மதிப்பீடு

பிளஸ் 2 விடைத்தாள் ஏப்., 1 முதல் மதிப்பீடு

பொள்ளாச்சி;பிளஸ் 2 பொதுத்தேர்வு நிறைவடைந்துள்ள நிலையில், விடைத்தாள் திருத்தும் பணி ஏப்., 1ம் தேதி முதல் தொடங்குகிறது.பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு, கடந்த 1ம் தேதி தொடங்கி, கடந்த, 22ம் தேதி நிறைவடைந்தது. இதைத்தொடர்ந்து, விடைத்தாள் திருத்தும் பணி ஏப்., 1ம் தேதி முதல் தொடங்கவுள்ளது. மே 6ம் தேதி, தேர்வு முடிவுகள் வெளியாகின்றன. பத்தாம் வகுப்புக்கான பொதுத்தேர்வு, வரும் 26ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 8ம் தேதி வரை நடைபெறவுள்ளது.தேர்வை முன்னிட்டு தேர்வு மைய ஒதுக்கீடு, அறை கண்காணிப்பாளர்களை நியமிக்கும் பணி, மாற்றுத் திறனாளிகளுக்கான உதவியாளர்கள் ஒதுக்கீடு உள்ளிட்ட பணிகளில், பள்ளிக்கல்வித்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ