பொள்ளாச்சி;பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்கள், விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்து, மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.பிளஸ் 2 பொதுத்தேர்வு மதிப்பெண் பட்டியல் பதிவிறக்கம், மறுகூட்டல் மற்றும் விடைத்தாள் நகல் பெறுவதற்கு தேவையான வழிமுறைகள் அறிவிக்கப்பட்டன. அவ்வகையில், பொள்ளாச்சி நகர் சுற்றுப்பகுதி மாணவர்கள் சிலர், மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்கவும் ஆர்வம் காட்டியுள்ளனர். அதற்காக, இணையதளம் வாயிலாகவும் விண்ணப்பித்துள்ளனர்.இந்நிலையில், மாணவர்கள் தங்களது விடைத்தாள் நகலை, இன்று மதியம், 2:00 மணி முதல் www.dge.tn.gov.inஎன்ற இணையதளத்தில் பெறலாம். அதற்கு, 'Notification- HSE Second Year Exam, March 2024 Scripts Download' என்ற வாசகத்தினை கிளிக் செய்ய வேண்டும். அங்கு தோன்றும் பக்கத்தில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து, விண்ணப்பித்த பாடங்களுக்கு உரிய விடைத்தாள்களின் நகல்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம், என தெரிவிக்கப்பட்டுள்ளது.கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:விடைத்தாள்களின் நகலை பதிவிறக்கம் செய்த பின், மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்கலாம். அதற்கும் அதே இணையதளத்தில் 'Application for Retotalling / Revaluation' என்ற தலைப்பை கிளிக் செய்து, வெற்று விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.இந்த விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து, இரு நகல்கள் எடுத்து, நாளைக்குள், (29 ம் தேதி) மதியம், 1:00 மணி முதல், ஜூன் 1 ம் தேதி, மாலை, மாலை 5:00 மணிவரை சம்பந்தப்பட்ட மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டிற்கான கட்டணத்தை மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் ரொக்கமாக செலுத்த வேண்டும். அதன்படி, மறுமதிப்பீட்டிற்கு பாடம் ஒவ்வொன்றுக்கும், 505 ரூபாய்; மறுகூட்டலுக்கு உயிரியல் பாடத்திற்கு, 305 ரூபாய்; பிற பாடங்கள் ஒவ்வொன்றுக்கும், 205 ரூபாய் செலுத்த வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.