உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தேர்தல் விதிமீறல்கள் தொடர்பாக தவறான தகவல் வெளியிடக்கூடாது போலீசார் எச்சரிக்கை 

தேர்தல் விதிமீறல்கள் தொடர்பாக தவறான தகவல் வெளியிடக்கூடாது போலீசார் எச்சரிக்கை 

கோவை:லோக்சபா தேர்தலில், கட்சியினரின் விதிமீறல்கள் குறித்த தவறான தகவல்களை வெளியிட்டால், அவர் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என, கோவை மாநகர போலீசார் எச்சரித்துள்ளனர்.கோவை மாநகர போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு;தேர்தல் பிரசாரம் தொடர்பாக, ஒவ்வொரு வேட்பாளரும் முறையாக விண்ணப்பித்து அனுமதி பெற்ற பின், அனுமதிக்கப்பட்ட பகுதிக்கு சென்று நிபந்தனைகளுக்கு உட்பட்டு, தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள வேண்டும்.தேர்தல் விதிமீறல்கள் தொடர்பான சம்பவம் அல்லது நிகழ்வு பற்றி, கருத்துக்களை சமுக வலைதளங்களில் பதிவிடுபவர்கள், அதன் உண்மைத் தன்மையை உறுதி செய்யாமல், தவறான தகவல்களை வெளியிடக்கூடாது. தனது செயல்கள் மூலம் கலகத்தை துாண்டும் வகையில் நடந்துகொள்வது, அனுமதியின்றி துண்டு பிரசுரங்களை அச்சிட்டு வெளியிடுவது மற்றும் சுவரொட்டிகளை ஒட்டுவது போன்ற குற்றங்களில் ஈடுபட்டால், அவர் மீது குற்ற வழக்கு பதிவு செய்து, நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை