உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நாகரூத்தில் வீடு கட்டும் பணி துவக்கம்; பொள்ளாச்சி சப் - கலெக்டர் ஆய்வு

நாகரூத்தில் வீடு கட்டும் பணி துவக்கம்; பொள்ளாச்சி சப் - கலெக்டர் ஆய்வு

ஆனைமலை;ஆனைமலை அருகே நாகரூத்தில், பழங்குடியின மக்களுக்காக கட்டப்படும் வீட்டை, சப் - கலெக்டர் ஆய்வு செய்து மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பொள்ளாச்சி, டாப்சிலிப், வால்பாறை, மானாம்பள்ளி உள்ளிட்ட வனச்சரகங்கள் உள்ளன.வனப்பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்காக, பழங்குடியினர் மேம்பாட்டு திட்டத்தில் வீடு கட்ட அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.அதன்படி, கோழிகமுத்தி, 31, கூமாட்டி, 22, எருமைப்பாறை, 09, நாகரூத் 1ல், 23, நாகரூத்,2ல், 15 வீடுகள் என மொத்தம், 100 வீடுகள் கட்டப்படுகின்றன.மலைப்பகுதியில் கட்டப்படும் ஒவ்வொரு வீட்டுக்கும், 4 லட்சத்து, 95 ஆயிரத்து, 430 ரூபாய் வீதம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நாகரூத் 2ல் கட்டப்படும் வீடுகள் கட்டும் பணிகளை, சப் - கலெக்டர் கேத்திரின் சரண்யா ஆய்வு செய்தார். அப்போது, பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.ஆனைமலை தாசில்தார் சிவக்குமார், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல தனி தாசில்தார் ரேணுகாதேவி மற்றும் வருவாய்துறை, வனத்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.தொடர்ந்து, பொதுமக்களிடம் தேவையான அடிப்படை வசதிகள் குறித்து சப் - கலெக்டர் கேட்டறிந்தார். அப்போது மக்கள், ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை மற்றும் டிரைவிங் லைசென்ஸ் வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.இதற்கு சப் - கலெக்டர், விரைவில் முகாம் நடத்தி உங்களுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். பின்னர், நாகரூத் 1ல் வீடு கட்டுவதற்காக கட்டுமானப்பொருட்கள் கொண்டு செல்வது குறித்தும் ஆய்வு செய்தார்.வருவாய்துறை அதிகாரிகள் கூறியதாவது: நாகரூத் 2ல் வீடுகள் கட்டுமானப்பணிகள் துவங்கப்பட்டுள்ளன. ஆனால், நாகரூத் 1ல், கட்டுமானப்பொருட்களை கொண்டு செல்வதில் இடையூறு உள்ளது. அரசு ஒதுக்கீடு செய்த நிதியை விட கூடுதலாக செலவாகும் சூழல் உள்ளது.எனவே, அங்கு எவ்வாறு பொருட்களை கொண்டு செல்லலாம் என சப் - கலெக்டர் ஆய்வு செய்தார். அப்போது, அங்குள்ள மக்கள், தாங்களாகவே வீடு கட்டிக்கொள்வதாக தெரிவித்தனர்.இதற்கு, ஒரு வீடு மாதிரியாக கட்டுங்கள்; அது நன்றாக இருந்தால் அதுபோன்று கட்டலாம்,' என சப் - கலெக்டர் தெரிவித்தார். இதற்கான பணிகளும் துவங்கப்பட உள்ளது.இவ்வாறு, தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி