உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வருமானவரி படிவங்களில் திருத்தம் செய்ய வாய்ப்பு

வருமானவரி படிவங்களில் திருத்தம் செய்ய வாய்ப்பு

பொள்ளாச்சி:வருமானவரி 'ரீபண்ட்' கோரி படிவம் தாக்கல் செய்யப்பட்டதில் திருத்தங்கள் செய்ய, வரும் 31ம் தேதி வரை வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.கோவை மண்டல வருமானவரித்துறை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: வருமானவரி செலுத்தியதில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை திரும்ப வழங்க (ரீபண்ட்) கோரி தாக்கல் செய்யப்படும் படிவங்களில், 2021-24ம் நிதியாண்டுகளில் பலர் விதிமுறைகளை மீறி விண்ணப்பித்தது கண்டறியப்பட்டுள்ளது. அதனால், 2022 ஏப்ரல் 1ம் தேதி முதல், வருமானவரிதாக்கல் செய்தவர்கள் தங்களின் படிவங்களில் திருத்தங்கள் ஏதேனும் இருப்பின், அவற்றை திருத்தியமைக்கப்பட்ட, வருமானவரி படிவங்களில் கூடுதல் வரி சேர்த்து தாக்கல் செய்யலாம். இந்த வாய்ப்பு வரும், 31ம் தேதி வரை மட்டுமேவழங்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்