உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பிரதமரின் ரூ.6,000 உதவித்தொகை; தமிழக வேளாண் துறை அலட்சியம்

பிரதமரின் ரூ.6,000 உதவித்தொகை; தமிழக வேளாண் துறை அலட்சியம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: பிரதமரின் விவசாய உதவித்தொகை திட்டத்தில் சேர்ப்பதற்கு, தமிழக வேளாண் துறை நடவடிக்கை எடுக்காததால், 10 லட்சம் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.தமிழகத்தில், 1.47 கோடி ஏக்கர் வேளாண் நிலங்கள், 79.38 லட்சம் விவசாயிகள் வசமுள்ளன. மத்திய வேளாண் துறை கணக்கெடுப்பின்படி, தமிழகத்தில், 93 சதவீத சிறு, குறு விவசாயிகளும், 7 சதவீதம் நடுத்தர மற்றும் பெரிய விவசாயிகளும் உள்ளனர். சிறு, குறு விவசாயிகளிடம், 62 சதவீத விவசாய நிலங்கள் உள்ளன. மொத்த வேளாண் நிலங்களில், 1.19 கோடி ஏக்கரில் மட்டுமே சாகுபடி நடந்து வருகிறது. பயிர் சாகுபடியில் ஈடுபடும் சொந்த நிலங்களை வைத்துள்ள விவசாயிகளுக்கு, ஆண்டுதோறும் பிரதமரின் விவசாய உதவித்தொகை திட்டத்தில், 6,000 ரூபாய் வழங்கப்படுகிறது. மூன்று தவணைகளாக, இத்திட்டத்தின் கீழ், தலா 2,000 ரூபாய் வீதம், விவசாயிகள் வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது. தமிழகத்தில், 2020, 2021ம் ஆண்டுகளில் இத்திட்டத்தின் கீழ், 44 லட்சம் விவசாயிகளுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டது. இதில், விவசாயிகள் அல்லாத பலர் முறைகேடாக சேர்க்கப்பட்டதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, மத்திய அரசு கிடுக்கிப்பிடி போட்டது. அதனால், பயனாளிகளின் எண்ணிக்கை தற்போது, 21.3 லட்சமாகக் குறைந்துள்ளது. இதுவரை தமிழக விவசாயிகளுக்கு, 16 தவணைகளில், 10,435 கோடி ரூபாயை, மத்திய அரசு வழங்கியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் பயன் பெறுவதற்கு, மேலும், 10 லட்சம் விவசாயிகள் வரை தகுதி உடையவர்களாக உள்ளனர். இதற்கென மத்திய அரசு உருவாக்கியுள்ள இணையதளத்தில், உரிய விபரங்களை வேளாண் துறையினர் பதிவேற்றம் செய்ய வேண்டும். ஆனால், அதற்கான நடவடிக்கை எடுக்காமல், வேளாண் துறையினர் மெத்தனமாக உள்ளனர். எனவே, தகுதியிருந்தும், மத்திய அரசு வழங்கும் விவசாய உதவித்தொகையை பெற முடியாமல், 10 லட்சம் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Natarajan
ஜூலை 11, 2024 10:00

ஐயா நான் கூட புதியதாக பதிவு செய்த எனது பட்டாவை வேளாண் அதிகாரிகள் திருப்பி அனுப்பி விட்டனர் அவர்கள் எனக்கு சொன்ன பதில் புதிய பட்டாவிற்கு ஆணை வரவில்லைவரவில்லை என்று சொல்கிறார்கள் இது என்ன அர்த்தம் என்று புரியவில்லை


SRINIVASAN KANNAN
ஜூலை 10, 2024 22:34

நான் ஜனவரி மாதம் பி எம் கிசான் அப்ளை செய்தேன் வேளாண்மை அலுவலகத்திலும் பைலை காண்பித்து விட்டேன் ஆனால் இன்னும் அப்புருவல் ஆகவில்லை. அதைபோல் பி எம் மோடி வீடு கட்டாமல் எங்களுக்கு மோடி வீடு கட்டியாச்சு என்று குறுஞ்செய்தி வந்துள்ளது.


syed ghouse basha
ஜூலை 06, 2024 19:36

மாநிலத்தில் ஜி எஸ் டி மூலம் வசூல் செய்த பணத்தில் 26 சதவீதம் கூட தமிழ் நாட்டிற்கு தராமல் குறைந்த நிதியை மத்திய அரசின் புரியாத பெயரில் கொடுத்து அதை பகிர்ந்து கொடுத்தால் அதில் ஊழல்னு ஊழையிடுவதும் பழி போடுவதும் பஜக வேலை


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஜூலை 06, 2024 14:15

மாநில வேளாண் துறை அலுவலகம் மூலமாக தான் சேர் முடியும். இதற்கு மாநில வேளாண் துறை அரசு அதிகாரிகள் தான் சேர்க்க முடியும். இது போலவே பிரதமர் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வீடு கட்டும் மானியம் பெற முடியாமல் மாநில அரசு தடுத்து கொண்டு உள்ளது.


Balasubramanian
ஜூலை 06, 2024 11:13

BA மட்டுமே படித்தவர்களுக்கு வேளாண் துறை பற்றி என்ன தெரியும்? பாவம் விவசாயிகள்


Sridhar
ஜூலை 06, 2024 10:34

தமிழக பாஜக இந்த மாதிரியான விஷயங்களில் அக்கறை செலுத்தி உண்மையான விவசாயிகளுக்கு மத்திய அரசின் உதவித்தொகை கிடைக்க ஏற்பாடு செய்யலாமே? இதற்க்கு ஏன் மாநில அரசின் அக்கறை தேவை? நினைத்து பாருங்கள் - 10 லட்சம் விவசாய குடும்பங்கள் மொத்தம் 44 லட்சம் குடும்பங்கள் அரசியல் செய்யவே லாயக்கில்லாத கும்பலோ இந்த பிஜேபி? என்ன ஜென்மங்களோ?


Ramesh
ஜூலை 06, 2024 08:14

அவர்கள் பெயர் சேர்க்காமல் விட்டாலும் பரவாயில்லை விவசாயிகளாகிய நாங்கள் திமுகவிற்கு தான் ஓட்டு போடுவோம்


karunamoorthi Karuna
ஜூலை 06, 2024 07:52

கருணாநிதி குடும்பம் பெயரில் திட்டம் இல்லை அதனால் வேளாண்மை துறைக்கு தெரியாது அப்படி கொடுத்தாலும் அவர்கள் திமுக வுக்கு தான் ஓட்டு போடுவார்கள்


P Karthikeyan
ஜூலை 06, 2024 07:00

இத்தனையும் வாங்கி கொண்டு இந்த தமிழக மக்கள் விவசாயிகள் நன்றி மறந்து திமுகவுக்கு வோட்டு போடுகின்றனர்


ramani
ஜூலை 06, 2024 06:53

திட்டத்திற்கு ஸ்டிக்கர் ஒட்டவேண்டியதுதானே. சொல்லியா தரணும்


மேலும் செய்திகள்



புதிய வீடியோ