உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / திறனறி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு 

திறனறி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு 

கோவை:கோவை கல்வி மாவட்ட அளவில் நடந்த தேசிய திறனறி தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி பரிசு வழங்கினார்.கோவை மாவட்டத்தில் இந்த கல்வியாண்டில் நடந்த, தேசிய திறனறி தேர்வில், 208 மாணவர்கள், முதலமைச்சரின் திறனறிவு தேர்வில், 34 மாணவர்கள், தமிழ் மொழி திறனறி தேர்வில், 12 மாணவர்கள் கையெழுத்து போட்டித் தேர்வில், 12 மாணவர்கள் மற்றும் காமராஜர் விருதுக்கு 60 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.இந்த மாணவர்களுக்கு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார். அவர் கூறுகையில், ''மாணவர்கள் அரசின் கல்வி உதவித்தொகை பெறும் தேர்வுகளில் பங்கு கொண்டு, திறமைகளை வெளிக்கொண்டு வருவது, வருங்காலத்தில் மாணவர்கள் பல போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற, இது அடித்தளமாக அமையும். உயர்கல்வியை தொடர்வதற்கும் உதவியாக இருக்கும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை