உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பீக் ஹவர்ஸ் மின் கட்டணத்தை உயர்த்த ஆலோசனை

பீக் ஹவர்ஸ் மின் கட்டணத்தை உயர்த்த ஆலோசனை

பாலக்காடு;கேரள மாநிலம், பாலக்காட்டில் நிருபர்களிடம், மின்சாரத் துறை அமைச்சர் கிருஷ்ணன்குட்டி கூறியதாவது:மின் நெருக்கடி பிரச்னைக்கு தீர்வு காண, இரவு நேர பீக் ஹவர்ஸ் மின்நுகர்வு கட்டணத்தை உயர்த்தவும், பகல் நேர மின் நுகர்வு கட்டணத்தை குறைக்கவும் ஆலோசனை செய்து வருகிறோம்.பெரும்பாலான வீடுகளிலும் ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதனால், ஒவ்வொரு நேரத்திலும் மின் நுகர்வு கணக்கிட முடியும்.பகலில் மின் நுகர்வு குறைவாக உள்ளது. அதிக மின் நுகர்வு இரவில் தான் உள்ளது. இந்த சூழலில், உச்ச நேர மின் நுகர்வை குறைக்க, கட்டணத்தை உயர்த்துவது குறித்து ஆலோசனை செய்கிறோம்.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை