உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பி.எஸ்.ஜி., கல்லுாரி  பட்டமளிப்பு விழா 

பி.எஸ்.ஜி., கல்லுாரி  பட்டமளிப்பு விழா 

கோவை:பி.எஸ்.ஜி., தொழில்நுட்ப கல்லுாரியில் பட்டமளிப்பு விழா, கல்லுாரி அரங்கில் நடந்தது. மத்திய தகவல் ஆணைய தகவல் பிரிவு கமிஷனர் ஆனந்தி ராமலிங்கம் பங்கேற்று, மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி கவுரவித்தார். இதில் அவர் பேசுகையில், ''கல்வி என்பது பட்டம் பெறுவதுடன் முடிவு பெறுவதல்ல; வாழ்நாள் முழுவதும் திறன்களை மேம்படுத்திக்கொள்ள வேண்டும்,'' என்றார். பயோமெடிக்கல், சி.எஸ்.இ, இ.இ.இ., இ.சி.இ., ஐ.சி.இ., ஆகிய துறைகளை சேர்ந்த, 720 மாணவர்கள் பட்டங்களை பெற்றனர். தரவரிசையில் இடம் பெற்றவர்கள், பதக்கங்கள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர். நிகழ்ச்சியில் கல்லுாரி ஆலோசகர் பிரகாசன், முதல்வர்(பொ) சித்ரா, துறைத் தலைவர்கள், பெற்றோர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை