உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அரசு கல்லுாரியில் பொது கலந்தாய்வு புள்ளியியல் படிப்புக்கு புது மவுசு

அரசு கல்லுாரியில் பொது கலந்தாய்வு புள்ளியியல் படிப்புக்கு புது மவுசு

கோவை;கோவை அரசு கலைக் கல்லூரியில், முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான பொது கலந்தாய்வில், புள்ளியியல் பாடப் பிரிவைத் தேர்ந்தெடுப்பதில், மாணவர்கள் ஆர்வம் செலுத்தினர். பாதுகாப்பியல் பாடத்தை குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களே தேர்ந்தெடுத்தனர்.அரசு கலைக் கல்லூரியில், சிறப்பு கலந்தாய்வு மே 30ம் தேதி துவங்கப்பட்டது. பி.காம், பி.காம் சி.ஏ., பி.காம் ஐ.பி., பி.எஸ்சி., கணினி அறிவியல், பி.எஸ்சி., ஐ.டி., பி.எஸ்சி., கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், புவி அமைப்பியல், பிசினஸ் அட்மினிஸ்டிரேஷன், சைக்காலஜி, புவியியல், அரசியல் அறிவியல் ஆகிய பாடப் பிரிவுகளுக்கு, கலந்தாய்வு நடத்தப்பட்டது.இதைத்தொடர்ந்து, புள்ளியியல், பப்ளிக் அட்மினிஸ்டிரேஷன், பாதுகாப்பியல், பொருளாதாரம் ஆகிய பாடப் பிரிவுகளுக்கு, நேற்று கலந்தாய்வு நடத்தப்பட்டதில், 255 இடங்களுக்கு 206 மாணவ, மாணவிகள் சேர்க்கப்பட்டுள்ளனர்.இதில், அதிகபட்சமாக புள்ளியியல் பாடப் பிரிவில், 50 இடங்களுக்கு 49 இடங்களில் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். பாதுகாப்பியல் பாடப் பிரிவில், 40 இடங்களில் 15 மாணவர்கள் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளனர். மொத்தமாக 29 காலியிடங்கள் உள்ளன.வரலாறு, சுற்றுலா மற்றும் மேலாண்மைத் துறை, தமிழ், ஆங்கிலம் ஆகிய பாடப் பிரிவுகளுக்கு, இன்று கலந்தாய்வு நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ