உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கழிப்பிடத்தை மூடியதால் பொதுமக்கள் அதிருப்தி

கழிப்பிடத்தை மூடியதால் பொதுமக்கள் அதிருப்தி

கிணத்துக்கடவு;கிணத்துக்கடவு, செங்குட்டைபாளையத்தில் மக்கள் நீண்ட காலமாக பொது கழிப்பிடத்தை பயன்படுத்த முடியாததால் சிரமப்படுகின்றனர்.கிணத்துக்கடவு, வரதனூர் ஊராட்சி, செங்குட்டைபாளையம் கிராமத்தில் அரசு பள்ளி அருகே உள்ள மகளிர் மற்றும் குழந்தைகள் கழிப்பிடம் உள்ளது. இந்த கழிப்பிடம் கட்டப்பட்டு, 10 ஆண்டுகளுக்கும் மேலாகிறது.கழிப்பிடம் கட்டப்பட்ட போது, சில மாதங்கள் மக்கள் பயன்படுத்தினர். அதன்பின், பயன்படுத்தவில்லை. மேலும், இந்த கட்டடத்தில் சில மாதங்களுக்கு முன் சீரமைப்பு பணிகளும் நடந்தது. பணிகள் முடிந்து பயன்பாட்டிற்கு வரும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்த்தனர்.ஆனால், சில நாட்களிலேயே கழிப்பிடம் மீண்டும் மூடப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.ஊராட்சி நிர்வாகத்தினர் கூறுகையில், 'கடந்த சில ஆண்டுகளாக பூட்டப்பட்டிருந்த கழிப்பிடம், புதுப்பிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது. தண்ணீர் பற்றாக்குறை இருப்பதால், தற்காலிகமாக கழிப்பிடம் மீண்டும் மூடப்பட்டுள்ளது. கழிப்பிடத்தின் தண்ணீர் தேவை பூர்த்தி செய்த பின் திறக்கப்படும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ