உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சிறுவாணி அணையை பலப்படுத்த புனே நிபுணர்கள் கருத்தறிய ஏற்பாடு

சிறுவாணி அணையை பலப்படுத்த புனே நிபுணர்கள் கருத்தறிய ஏற்பாடு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை;கோவையின் முக்கிய நீராதாரங்களில் ஒன்றான சிறுவாணி அணை, கேரள மாநிலம் பாலக்காட்டில் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது. அணையின் மொத்த உயரமான, 50 அடி நீர் தேக்காமல் பாதுகாப்பு காரணங்களை கூறி, 45 அடி மட்டுமே கேரள அரசு நீரை தேக்குகிறது. நேற்று முன்தினம், 42 அடியாக அணையின் நீர்மட்டம் இருந்த நிலையில், கேரள நீர்பாசனத்துறை அதிகாரிகள், அணையில் இருந்து, 1000 கனஅடி நீரை வெளியேற்றினர். கேரள அரசின் அறிவுறுத்தலுக்கு ஏற்ப, 45 அடிக்கு நீர் மட்டம் உயர்வதற்கு முன்னரே, மதகை திறந்து தண்ணீரை வெளியேற்றியது, தமிழக அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இதையடுத்து, கோவை மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் நேற்று சிறுவாணி அணைக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். கோவை மாநகராட்சிக்கு தண்ணீர் செல்லும் நீர் திறப்பு பகுதி, தண்ணீர் செல்லும் சுரங்கப்பாதையையும் ஆய்வு செய்தார்.அவர் கூறியதாவது:அணையின் மொத்த கொள்ளளவு, 878.5 மீட்டர்(50 அடி). தற்போது உள்ளது, 876.5 மீட்டர்(42 அடி). அணையை சுற்றியுள்ள, 25 நீர்வீழ்ச்சிகளிலும், வரத்து அதிளவில் உள்ளதால், தற்போது, 2.5 கோடி லிட்டர் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. கோவைக்கு தினமும், 10 கோடி லிட்டர் நீர் வழங்கப்படுகிறது. மழையளவு அதிகரிக்கும் போது, இன்னும் கூடுதலாக திறக்க வாய்ப்புள்ளது. மழை குறைந்து, நீர் வரத்து குறைந்தால் தண்ணீர் திறந்து விடுவது நிறுத்தப்படும். அணையின் நீர்மட்டத்தை, 50 அடியாக உயர்த்த வேண்டும் எனில், அணையில் உள்ள நீர்க்கசிவை சரி செய்ய வேண்டும். இதற்காக, புனேயில் உள்ள மத்திய நீர் மற்றும் மின்சார ஆராய்ச்சி நிலையத்தில் உள்ள நிபுணர்களின் கருத்துகளை பெற, கேரள அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கு, ரூ.17 லட்சம் வைப்புத்தொகை செலுத்த வேண்டும். அதற்கு இரு அரசுகளும் ஒப்புக்கொண்டுள்ளன. என்ன விதமான பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும் என நிபுணர்கள் தெரிவித்தால், தேவையான நிதியை தமிழக அரசு ஒதுக்கி, கேரள அரசு பணிகளை மேற்கொள்ளும். அதன் பின்னர், மொத்த கொள்ளளவும் நீரை தேக்கலாம். புனேவில் இருந்து நிபுணர்கள் விரைவில் வரவுள்ளனர்.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை