உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கால்நடைகளை கட்டுப்படுத்த தயக்கம் அவதிக்குள்ளாகும் வாகன ஓட்டுநர்கள்

கால்நடைகளை கட்டுப்படுத்த தயக்கம் அவதிக்குள்ளாகும் வாகன ஓட்டுநர்கள்

வால்பாறை:வால்பாறை நகரில் கால்நடைகளின் நடமாட்டத்தால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.வால்பாறை நகரத்தில், இடநெருக்கடியால் மக்கள் நாள் தோறும் அவதிப்படுகின்றனர். இந்நிலையில், நகரில் சமீப காலமாக கால்நடைகளின் ஆதிக்கம் அதிகமாக காணப்படுகிறது.ஆடு, மாடு, தெருநாய் போன்றவை நடுரோட்டில் உலா வருவதால் வாகனங்கள் செல்ல முடியாமலும், பொதுமக்கள் ரோட்டில் நடந்து செல்ல முடியாமலும் சிரமப்படுகின்றனர்.குறிப்பாக, இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் கால்நடைகளின் நடமாட்டத்தால், கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கால்நடைகளை கட்டுப்படுத்த, வால்பாறை நகராட்சி நிர்வாகமும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.பொதுமக்கள் கூறியதாவது: வால்பாறை நகரில் ரோடு மிகவும் குறுகலாக உள்ளதால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சமீப காலமாக கால்நடைகளின் நடமாட்டமும் அதிக அளவில் உள்ளது.இதனால், ரோட்டில் நிம்மதியாக நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது. இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், ரோட்டில் கேட்பாரற்று சுற்றும் கால்நடைகளை பறிமுதல் செய்ய வேண்டும்.பொள்ளாச்சி நகராட்சியில், கால்நடை உரிமயைாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதை போன்று, கால்நடைகளை அவிழ்த்து விடும் உரிமையாளர்களுக்கு வால்பாறை நகராட்சி அதிகாரிகள் பாரபட்சமின்றி உடனடியாக அபராதம் விதிக்க வேண்டும்.இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ