உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / முறிந்து விழும் மரக்கிளைகள் அகற்ற வாகன ஓட்டிகள் கோரிக்கை

முறிந்து விழும் மரக்கிளைகள் அகற்ற வாகன ஓட்டிகள் கோரிக்கை

மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையம்- கோத்தகிரி சாலையில் முறிந்து விழும் மரக்கிளைகளால், வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தென்மேற்கு பருவமழை தீவிரம் அடையும் முன் காய்ந்த மற்றும் விழும் நிலையில் உள்ள மரக்கிளைகளை அகற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.மேட்டுப்பாளையம் --கோத்தகிரி சாலையின் இருபுறங்களிலும் மரங்கள் உள்ளன. தற்போது தென் மேற்கு பருவமழை துவங்கியுள்ள, இச்சூழலில் மேட்டுப்பாளையம், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது.மழை காரணமாக காற்றின் வேகம் அதிகரித்துள்ளது. இதனால் பலவீனம் அடைந்துள்ள மரக்கிளைகள் சாலைகளில் முறிந்து விழுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். அந்த மரக்கிளைகளை கண்டறிந்து, தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைவதற்குள் அகற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில்,ஊட்டி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் போது, பெரும்பாலான மக்கள் கோத்தகிரி சாலையை பயன்படுத்தி ஊட்டி செல்கின்றனர். கோத்தகிரி சாலையில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடையும் பட்சத்தில், காய்ந்த மரக்கிளைகள் சாலையில் விழும் அபாயம் உள்ளது. பயணிக்கும் போது வாகனத்தின் மீது விழுந்தால், பெரும் விபத்து ஏற்படும் வாய்ப்புள்ளது. நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், வனத்துறையினருடன் இணைந்து விழும் நிலையில் உள்ள மரக்கிளைகளை அகற்ற வேண்டும், என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை