உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாற்று இடம் வழங்க கோரி கிராமசபையில் தீர்மானம்

மாற்று இடம் வழங்க கோரி கிராமசபையில் தீர்மானம்

வால்பாறை;வால்பாறை அடுத்துள்ளது உடுமன்பாறை செட்டில்மென்ட். இங்கு, சுந்தரம்குடி, ஆறுமுகம் குடி என இரண்டு குடிகளில், 34 குடும்பத்தை சேர்ந்த பழங்குடியின மக்கள் வசிக்கின்றனர்.இந்நிலையில், உடுமன்பாறை செட்டில்மென்ட் பகுதியில் கிராமசபைக் கூட்டம் கிராம சபைத்தலைவர் நஞ்சப்பன், மூப்பன் மணிகண்டன் ஆகியோர் தலைமையில் நடந்தது.கூட்டத்தில், கடந்த மாதம் பெய்த கனமழையால், ஆறுமுகம்குடி, சுந்தரம்குடிகளில், 11 வீடுகள் சேதமடைந்தன. பாதிக்கப்பட்ட 11 குடும்பங்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும்.சேதமடைந்த வீடுகளை கான்கீரீட் வீடுகளாக மாற்றித்தர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதியில் போதிய அடிப்படை வசதிகள் ஏற்படுத்த வேண்டும் எனபன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை