உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / திறந்தவெளியில் கொட்டப்படும் கழிவால் நோய் பரவும் அபாயம்

திறந்தவெளியில் கொட்டப்படும் கழிவால் நோய் பரவும் அபாயம்

வால்பாறை : வால்பாறையில், பல்வேறு இடங்களில் குப்பை அகற்றாததால், சுகாதார சீர்கேடு நிலவுகிறது.வால்பாறை நகரில் மட்டும், 2,429 வீடுகள் உள்ளன. துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ் வீடு மற்றும் கடைகளில் வெளியாகும் குப்பையை தரம் பிரித்து பெறுவதை கண்காணிக்க இரண்டு பரப்புரையாளர், ஐந்து மேற்பார்வையாளர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர்.இந்நிலையில், கடந்த சில நாட்களாக வால்பாறை நகரில் திறந்தவெளியில் குப்பை கொட்டப்படுகிறது. குறிப்பாக, ஸ்டேன்மோர் ரோடு, படகு இல்லம் செல்லும் ரோட்டில் குப்பை குவிக்கப்பட்டுள்ளது. இதனால், நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதோடு, கொசு உற்பத்தியும் அதிகரித்து வருகிறது.பொதுமக்கள் கூறுகையில், 'வால்பாறை நகராட்சி சார்பில், வீடுகள் மற்றும் கடைகளில் வெளியாகும் குப்பையை தரம் பிரித்து பெறுவதை முறையாக குப்பைக்கிடங்கில் சேர்க்க வேண்டும். திறந்தவெளியில் குப்பை கொட்டப்படுவதை தடுக்க, நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ