உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ரோட்டில் பாறை விழுந்து போக்குவரத்து பாதிப்பு

ரோட்டில் பாறை விழுந்து போக்குவரத்து பாதிப்பு

வால்பாறை;வால்பாறை அருகே, ரோட்டில் பாறை விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.வால்பாறையில் கனமழை பெய்வதால், பல்வேறு இடங்களில் மண் சரிந்தும், மரம் விழுந்தும் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. வால்பாறை - ஆழியாறு ரோட்டில் நேற்று காலை மரம் விழுந்து சிறிது நேரம் போக்குவரத்து பாதித்தது.இதேபோல், கவர்க்கல் எஸ்டேட் பகுதியிலிருந்து, தலனார் வழியாக சக்தி எஸ்டேட் செல்லும் ரோட்டில் நேற்று காலை பாறை உருண்டு விழுந்ததால், போக்குவரத்து பாதித்தது. பாறை அகற்றப்பட்ட பின், மூன்று மணி நேரத்திற்கு பின் போக்குவரத்து சீரானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ