உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ரூ. 250 கோடி நிலம் போலி பத்திரப்பதிவு: மூவர் சஸ்பெண்ட்

ரூ. 250 கோடி நிலம் போலி பத்திரப்பதிவு: மூவர் சஸ்பெண்ட்

திருப்போரூர்:கன்னிவாக்கம் கிராமத்தில், தனியார் நிறுவன கட்டுப்பாட்டில், 25.91 ஏக்கர் நிலம் உள்ளது. இதில், 5.23 ஏக்கர் நிலம் தொடர்பான அசல் ஆவணங்களை உறுதிப்படுத்துவது தொடர்பாக வழக்கு நிலுவையில் உள்ளது. கடந்த மே மாதம், இந்நிறுவனத்தின் பெயரில் இருந்து பொது அதிகாரம் பெற்றதாக போலி ஆவணம் தயாரிக்கப்பட்டு, அதன் அடிப்படையில், 250 கோடி ரூபாய் மதிப்பிலான, 5.23 ஏக்கர் நிலம், ஐந்து பத்திரங்களாக வேறு பெயர்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. திருப்போரூர் சார்- பதிவாளர் கணேசன், தலைமை எழுத்தர் சக்திபிரகாஷ், ஜூனியர் உதவியாளர் சதீஷ்குமார் ஆகியோர் மோசடிக்கு உடந்தையாக இருந்தது உறுதியானது.இதையடுத்து, பதிவுத்துறை ஐ.ஜி., ஆலிவர் பொன்ராஜ், மூவரையும், நேற்று 'சஸ்பெண்ட்' செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Rajaiah Samuel Muthiahraj
ஜூன் 16, 2024 14:37

காஞ்சிபுரம் நகரில் மகேந்திரபல்லவன் தெருவும் கேடிஎஸ் மணி தெருவும் இணைக்கும் 180 அடி நீளம் 30 அடி அகலம் கொண்ட சாலையினையே பத்திரப்பதிவு துறை வருவாய்த்துறை உள்ளாட்சித் துறை மாமல்லன் கூட்டுறவு சங்கம் மாமல்லன் குடியிருப்போர் சங்கம் அனைத்தும் கூட்டணி வைத்து சாலையினையே முழு ஆக்கிரமிப்புக்கு தாரை வார்த்துள்ளார்கள் எக்கட்சி ஆட்சியில் அமர்ந்திடினும் கண்டுகொள்ளுவதில்லை ஊடகங்களும் ஊழலுக்கு உறுதுணையாக இருக்கும்விதத்தில் செய்திகளாக வெளிப்படுத்திடுவதே இல்லை


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை