| ADDED : ஆக 22, 2024 11:55 PM
தொண்டாமுத்துார்:பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.'காலியாக உள்ள ஊராட்சி செயலாளர் பணியிடங்கள் உள்ளிட்ட அனைத்து நிலைப்பணியிடங்களையும் உடனே நிரப்ப வேண்டும்; ஊராட்சி செயலாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் உள்ளிட்ட விடுபட்ட உரிமைகளை வழங்க வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்திற்கு தனி ஊழியர் ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கம் சார்பில், மாநிலம் தழுவிய இரண்டு நாள் தற்செயல் விடுப்பு போராட்டம் நேற்று நடந்தது. இந்நிலையில், தொண்டாமுத்துார் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணி புரியும் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் பணியாளர்கள் என, 15க்கும் மேற்பட்டோர் நேற்று தற்செயல் விடுப்பு எடுத்தனர். இன்றும், தற்செயல் விடுப்பு எடுக்க உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.