உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தேர்வில் சாதித்த பள்ளி மாணவர்கள்

தேர்வில் சாதித்த பள்ளி மாணவர்கள்

கோவை;குனியமுத்துார், சரஸ்வதிராமச்சந்திரன் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில், 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர்.பள்ளி அளவில், மாணவர்கள் கிஷோர் குமார் 470 மதிப்பெண் பெற்று முதலிடமும், முகமது ஆதில் 463 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடமும், மாணவி கார்த்தியாயினி 462 மதிப்பெண் பெற்று மூன்றாம் இடமும் பெற்றுள்ளனர்.மாணவர்களை, பள்ளி தாளாளர் சந்தானகோபால், அறங்காவலர்கள் ராஜேந்திரன், ரவீந்திரன் மற்றும் முதல்வர், துணை முதல்வர், ஆசிரியர்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை