உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வாகனங்களை மறித்து மொபைல்போன் பறிப்பு

வாகனங்களை மறித்து மொபைல்போன் பறிப்பு

நெகமம்;நெகமம் சுற்றுப்பகுதியில் வாகனங்களை மறிந்து மொபைல்போன் பறித்த நபர்களை போலீசார் தேடுகின்றனர்.செஞ்சேரிமலையை சேர்ந்தவர் சந்திரன், 60, மளிகை கடை நடத்துகிறார். இவர், சொந்த வேலைக்காக பைக்கில் சிறுகளந்தை வழியாக சென்று கொண்டிருந்தார்.அப்போது, ரோட்டில் நின்றிருந்த இருவர் சந்திரனை வழிமறித்து, முகவரி விசாரிப்பது போல் நடித்து, அவரிடம் இருந்த மொபைல்போனை பறித்து தப்பி ஓடி விட்டனர்.இதே போன்று, காரச்சேரியை சேர்ந்த விவசாயி பழனிசாமி, 60, என்பவர் உறவினரை பார்க்க மஞ்சம்பாளையம் சென்ற போது, வழிமறித்த இருவர் அவரிடம் மொபைல்போனை பறித்து சென்றனர்.இதுகுறித்து, நெகமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, வாகனங்களை வழிமறித்து, மொபைல்போன் பறிக்கும் நபர்களை தேடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ