| ADDED : ஆக 20, 2024 12:51 AM
கோவை;கோவை மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில், 2022ம் ஆண்டு முதல் பள்ளி மேலாண்மை மறு கட்டமைப்பு குழுக்கள் செயல்பட்டு வருகின்றன.இந்த மேலாண்மை குழு உறுப்பினர்களின் பதவிக்காலம், இந்த ஆண்டு நிறைவடைந்து இருப்பதால், அனைத்து பள்ளிகளிலும் புதிய பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். இதன்படி, செல்வபுரம் மைய தொடக்கப்பள்ளியில், பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த குழுவில் தலைமை ஆசிரியர், உதவி ஆசிரியர், கல்வியாளர், மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர் தலா ஒருவரும், இரண்டு உள்ளாட்சி பிரதிநிதிகள், நான்கு முன்னாள் மாணவர்கள், 14 பெற்றோர்கள் என, மொத்தம் 24 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த உறுப்பினர்கள், 2026ம் ஆண்டு வரை பள்ளியில் மாணவர்களின் நலன் சார்ந்து, பள்ளியின் வளர்ச்சிக்காக பணியாற்ற உள்ளனர்.