உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஆனைகட்டியில் சேவா பாரதி மருத்துவ முகாம்

ஆனைகட்டியில் சேவா பாரதி மருத்துவ முகாம்

பெ.நா.பாளையம்;ஆனைகட்டியில் மேட்டுப்பாளையம் சேவா பாரதி சார்பில் பள்ளி மாணவிகளுக்கான மாதாந்திர மருத்துவ முகாம் நடந்தது.ஆனைகட்டியில் தயானந்த மாணவியர் விடுதி உள்ளது. இங்கு தங்கி கல்வி கற்கும் மாணவியர்களுக்கு மேட்டுப்பாளையம் சேவா பாரதி சார்பில், மாதாந்திர மருத்துவ பரிசோதனை நடந்தது. இதில், டாக்டர் வெங்கடலட்சுமி சூரஜ் பங்கேற்று, மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டார். நிகழ்ச்சியில், ஆனைகட்டி பகுதி சேவா பாரதி பொறுப்பாளர்கள் ராதிகா, மலர்விழி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இத்தகவலை சேவா பாரதி கோட்ட பொது செயலாளர் முரளி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை