மேலும் செய்திகள்
வண்ணக் கோலமிட்டு எஸ்.ஐ.ஆர்., விழிப்புணர்வு
12 hour(s) ago
ஆட்டோமேட்டிவ் துறையின் புதிய நுட்பங்கள் கண்காட்சி
12 hour(s) ago
வேலையுடன் ஊக்கத்தொகை பயன்படுத்திக்கொள்ள அழைப்பு
12 hour(s) ago
கோவை:பெண் போலீஸ் குறித்து அவதுாறு கருத்து தெரிவித்ததாக, கைதான சவுக்கு சங்கர், பெலிக்ஸ் ஆகியோர், வழக்கிலிருந்து விடுவிக்க மனு தாக்கல் செய்தனர். சென்னை, மதுரவாயலை சேர்ந்த சங்கர்,48, 'சவுக்கு மீடியா' என்ற 'யு டியூப்' சேனல் நடத்தி பிரபலமானவர். இவர், 'ரெட்பிக்ஸ்' என்ற மற்றொரு 'யு டியூப்' சேனலுக்கு பேட்டி அளித்தபோது, பெண் போலீஸ் குறித்து, அவதூறு கருத்துக்களை தெரிவித்ததாக புகாரின் பேரில், சவுக்கு சங்கர், யு டியூப் சேனல் நிர்வாகி பெலிக்ஸ் ஜெரால்டு ஆகியோரை, கோவை சைபர் கிரைம் போலீசார், மே, 4 ல் கைது செய்தனர். சவுக்கு சங்கர் மீது, பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டதால், குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். இருவர் மீதும் கோவை, ஜே.எம்:4, கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், வழக்கிலிருந்து விடுவிக்க, அதே கோர்ட்டில் இருவரும் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.
12 hour(s) ago
12 hour(s) ago
12 hour(s) ago