மேலும் செய்திகள்
இ-சிகரெட், லேப்டாப் பறிமுதல்
4 hour(s) ago
மாநில கூடைப்பந்து போட்டி; வீரர், வீராங்கனை சுறுசுறுப்பு
4 hour(s) ago
கடைவீதிகளில் மக்கள் கூட்டம்
4 hour(s) ago
லிங்கனுாரில் குறுகிய தரைப்பாலத்தில் தடுமாற்றம்!
4 hour(s) ago
கோவை:வேளாண் பல்கலையின் இளநிலை படிப்புகளுக்கு, இதுவரை, 23 ஆயிரம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.வேளாண் பல்கலையின் கீழ், 18 உறுப்பு கல்லுாரிகள், 28 இணைப்பு கல்லுாரிகளில் 14 இளநிலை படிப்புகள் வழங்கப்படுகின்றன. இதன் வாயிலாக உறுப்பு கல்லுாரிகளில், 2,555 மாணவர்களும், இணைப்பு கல்லுாரிகளில், 2,806 மாணவர்களும், அண்ணாமலை பல்கலையின் கீழ், 340 இடங்களிலும், மீன்வளப் பல்கலையின் கீழ், 345 மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர். இவ்விடங்களுக்கான விண்ணப்பப்பதிவு, கடந்த, 7ம் தேதி துவங்கியது. ஜூன், 6ம் தேதி பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்பிக்கலாம். http://tnagfi.ucanapply.com, www.tnau.ac.in என்ற இணையதளங்களில் முழுமையான விபரங்கள் உள்ளன. மீன்வளப் பல்கலை, அண்ணாமலை பல்கலை, மற்றும் வேளாண் பல்கலையில் உள்ள படிப்புகளுக்கு ஒரே விண்ணப்பம் சமர்ப்பித்தால் போதும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.நேற்று மாலை வரை, மொத்தம், 23 ஆயிரத்து, 448 விண்ணப்பங்கள் இணையதளத்தில் பெறப்பட்டுள்ளன. பட்டயபடிப்புக்கு இதுவரை, 2,153 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.சந்தேகங்களுக்கு, tnau.ac.inஎன்ற இ-மெயில், 9488635077, 9486425076 என்ற மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளலாம் என, வேளாண் பல்கலை தெரிவித்துள்ளது.
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago