மேலும் செய்திகள்
வண்ணக் கோலமிட்டு எஸ்.ஐ.ஆர்., விழிப்புணர்வு
13 hour(s) ago
ஆட்டோமேட்டிவ் துறையின் புதிய நுட்பங்கள் கண்காட்சி
13 hour(s) ago
வேலையுடன் ஊக்கத்தொகை பயன்படுத்திக்கொள்ள அழைப்பு
13 hour(s) ago
வால்பாறை;வால்பாறையில் உள்ள செட்டில்மென்ட் பகுதியில், சமுதாய பொருளாதார கணக்கெடுப்பு பணி நடந்தது.கோவை மாவட்டம், வால்பாறை மலைப்பகுதியில் பழங்குடியினர் சமூக பொருளாதார கணக்கெடுப்பு, ராமநாதபுரம் மாவட்டம் இல்லம்தேடி கல்வியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் லியோன் தலைமையில் நடந்தது.கோவை மாவட்ட இல்லம்தேடி கல்வியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜஸ்டீன் ஜெரால்டு ஜெயராஜ் முன்னிலையில் கணக்கெடுப்பு பணி நடந்தது.வால்பாறை அடுத்துள்ள நல்லமுடி உடுமன்பாறை, பாலகணாறு ஆகிய செட்டில்மென்ட் பகுதியில் கணக்கெடுப்பு பணி நடந்தது.கணக்கெடுப்பாளர்கள் கூறுகையில், 'பழங்குடியின மக்களை நேரில் சந்திந்து அவர்களின் எண்ணங்களையும், குறைகளையும், எதிர்பார்ப்புக்களையும் கேட்டறிந்தோம். அரசின் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றார்.கணக்கெடுப்பு பணியில், ஒருங்கிணைப்பாளர்கள் சதீஸ்குமார் (வால்பாறை), விஸ்வநாதன் (ஆனைமலை) உட்பட பலர் பங்கேற்றனர்.
13 hour(s) ago
13 hour(s) ago
13 hour(s) ago