| ADDED : ஆக 07, 2024 11:29 PM
மேட்டுப்பாளையம் : காரமடை அருகே வெள்ளியங்காட்டில் வேளாண் துறையின் அட்மா திட்டம் கூட்டம் நடைபெற்றது. இதில் மண் வள மேலாண்மை குறித்த பயிற்சி விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டது.இதில் காரமடை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் பாக்கியலட்சுமி, வேளாண் அறிவியல் நிலைய தொழில்நுட்ப வல்லுநர் சகாதேவன் உள்ளிட்டோர் விவசாயிகளிடம் மண் மாதிரி எடுக்கும் முறை, மண் வள மேலாண்மை குறித்து பேசினர்.அவர்கள் பேசுகையில், மண் வளம் பாதுகாக்க மண் பரிசோதனை செய்ய வேண்டும். பின், அதில் பரிந்துரைக்குட்பட்ட கனிம வள உரங்களை உபயோகிக்க வேண்டும். திரவ உயிர் உரங்கள், நுண்ணூட்டங்கள் பயன்படுத்த வேண்டும். இதனால் ஊட்டசத்துக்கள் பயிர்களுக்கு கிடைத்து அதிக மகசூல் கிடைக்கும். பசுந்தாள் பயிர்களை மடக்கி உழவு செய்ய வேண்டும். மண் புழு உரப்படுகை அமைக்க ரூ. 3,000 மானியம் வழங்கப்படுகிறது, என்றார். இக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை அட்மா உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் டி. தினேஷ்குமார் மற்றும் ஆர். தினேஷ்குமார் செய்திருந்தனர்.