மேலும் செய்திகள்
2 அடி ஆழம் தோண்டப்பட்டது ஏன்?
27-Feb-2025
அன்னுார், ;பள்ளி மாணவன், குட்டை நீரில் மூழ்கி, இறந்த இடத்தில், மீண்டும் மண் கடத்தல் நடப்பதாக புகார் தெரிவிக்கப்பட்டு உள்ளது.குப்பனுார் ஊராட்சி, ஆலாங்குட்டையில், அரசு நிர்ணயித்ததை விட ஆழமாகவும், அகலமாகவும் மண் தோண்டி கடத்தப்பட்டு வந்தது. மிக அதிக ஆழத்தில் தோண்டப்பட்ட குழிகளில் மழைநீர் தேங்கி நின்றது.ஓராண்டுக்கு முன், அப்பகுதியில் விளையாடச் சென்ற பிளஸ் 2 மாணவன் சக்திவேல், மண் மாபியாக்களால் தோண்டப்பட்ட குழியில் தேங்கிய நீரில் மூழ்கி இறந்தார். இதையடுத்த அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர். மண் எடுப்பது நிறுத்தப்பட்டது.இந்நிலையில் சக்திவேலின் தந்தை மற்றும் அப்பகுதி மக்கள் கூறுகையில், 'மீண்டும் அங்கு நிர்ணயிக்கப்பட்ட ஆழத்தை விட மிக அதிக ஆழத்தில் மண் எடுக்கப்படுகிறது.தற்போதும் குட்டையில் நீர் உள்ளது. கோடை மழை பெய்யும்போது மேலும் குட்டையில் அதிக தண்ணீர் தேங்கும். குட்டையை ஒட்டி ஆழமாக எடுக்கப்படும் மண்ணால் புதிய குழிகள் ஏற்படுகின்றன. இதனால் இங்கு விபரீதம் நடக்க வாய்ப்பு உள்ளது. எனவே, விதிமுறைகளை மீறி, மண் எடுப்போர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.
27-Feb-2025