உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பகலில் சூரியசக்தி, இரவில் காற்றாலை; மின் வாரியத்துக்கு உதவும் இயற்கை

பகலில் சூரியசக்தி, இரவில் காற்றாலை; மின் வாரியத்துக்கு உதவும் இயற்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : தமிழக மின் நுகர்வை பூர்த்தி செய்வதில், காற்றாலை, சூரியசக்தி ஆகியவை 11 கோடி யூனிட்கள் கொடுத்து, முதலிடத்தில் உள்ளன.கோடை வெயில் சுட்டெரித்ததால் ஏப்ரல், மே மாதங்களில், தமிழகத்தில் மின் நுகர்வு, தினமும் 40 கோடி யூனிட்களை தாண்டியது. இதை பூர்த்தி செய்வதற்கான மின் உற்பத்தி, மின் கொள்முதல் மேலாண்மை பணிகளை, மாநில மின் பகிர்ந்தளிப்பு மையம் மேற்கொள்கிறது. அந்த மையத்தின் விபரப்படி, பல்வேறு தனியார் நிறுவனங்கள், 9,019 மெகா வாட் திறனில் காற்றாலை; 8,116 மெகா வாட் திறனில் சூரியசக்தி மின் நிலையம் அமைத்துள்ளன. அவற்றில் உற்பத்தியாகும் மின்சாரத்தை, மின் வாரியம் கொள்முதல் செய்கிறது. தற்போது மின் நுகர்வு, 35 கோடி யூனிட்கள் என்றளவில் உள்ளது. மே முதல், காற்றாலை சீசன் துவங்கியுள்ளது. சூரியசக்தி மின் உற்பத்திக்கு, சூரியனின் வெளிச்சமே முக்கியம்; வெப்பம் அல்ல. தற்போது, சூரியசக்தி மின்சாரமும் அதிகம் கிடைக்கிறது. அதன்படி, நேற்று முன்தினம் காற்றாலைகளில், 7.69 கோடி யூனிட்களும்; சூரியசக்தி மின் நிலையங்களில், 3.75 கோடி யூனிட் மின்சாரம் கிடைத்துள்ளது. அன்றைய நாளின் மின் நுகர்வு, 34.76 கோடி யூனிட்கள். அதை பூர்த்தி செய்ததில், 11.44 கோடி யூனிட்களுடன் காற்றாலை, சூரியசக்தியை உள்ளடக்கிய புதுப்பிக்கத்தக்க மின்சாரம் முதலிடத்தில் உள்ளது. அதைத் தொடர்ந்து, மத்திய அனல், அணுசக்தி மின்சாரத்தின் பங்கு, 9.42 கோடி யூனிட்களாகவும்; மின் வாரிய அனல் மின்சாரத்தின் பங்கு, 7.64 கோடி யூனிட்களாகவும் உள்ளன. மீதி மின்சாரம், தனியார் எரிவாயு, அனல் மின்சார கொள்முதலாக உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

pattikkaattaan
ஜூன் 12, 2024 10:16

மின்சாரம் சூரிய ஔி மின் தகடுகள் பொருத்தி நாமே உற்பத்தி செய்யலாம் நீங்கள் மின்கட்டணம் அதிகம் என்று நினைத்தால்...


Kasimani Baskaran
ஜூன் 12, 2024 06:57

கட்டணம் மட்டும் குறையாமல் அதிகரித்துக்கொண்டேதான் போகிறது. பெட்ரோல் டீசல் விலை இரண்டாண்டுகளாக ஒரே விலையில் இருக்கும் பொழுது கூட அது உயர்ந்து விட்டதாக கதறும் உபிஸ் மின்கட்டணம் பற்றி வாயே திறப்பது இல்லை என்பது அவர்கள் அடிமை ஜந்துக்கள் என்பதை வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது


Balasubramanian
ஜூன் 12, 2024 05:28

ஆகாயத்தில் இருந்து சூரிய ஒளி, காற்று, அனல் மின்சாரம், நீர், அணு சக்தி - இங்கேயும் பஞ்ச பூதங்கள் தான் உதவி செய்கிறது


மேலும் செய்திகள்