உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வெளியூர் செல்ல சிறப்பு பஸ் இயக்கம்

வெளியூர் செல்ல சிறப்பு பஸ் இயக்கம்

கோவை : தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கோவை கோட்டம் சார்பில், பவுர்ணமி தினமான இன்று (24ம் தேதி), பங்குனி உத்திரம் மற்றும் பண்ணாரி குண்டம் - 25ம் தேதி மற்றும் வார இறுதி நாட்களை கணக்கில் கொண்டு, சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.கோவை மற்றும் சுற்றுப்புற ஊர்களில் இருந்து பழனி, திருவண்ணாமலை, பண்ணாரி, திருக்கோவில், மதுரை, தேனி, திருச்சி, சேலம், ஊட்டி செல்லவும் மற்றும் திரும்பி வருவதற்கும், வழக்கமான பஸ்களுடன் கூடுதல் பஸ்கள் இயக்கப்படும். பழனி செல்ல, 30 சிறப்பு பஸ்கள், திருவண்ணாமலைக்கு 25 சிறப்பு பஸ்கள், பண்ணாரி செல்ல, 50 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என, அரசு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி