| ADDED : மே 02, 2024 06:58 AM
கோவை : குரு பெயர்ச்சியையொட்டி, கோவையில் உள்ள கோவில்களில், சிறப்பு பூஜைகள் நடந்தன. நவகிரகங்களில் தேவகுருவான குருபகவான், ஆண்டுக்கு ஒருமுறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பிரவேசிக்கிறார். குருபகவான் கார்த்திகை 1ம் பாதத்தில், மேஷ ராசியிலிருந்து கார்த்திகை 2ம் பாதத்தில் ரிஷப ராசிக்கு, நேற்று மாலை 5:19 மணிக்கு பெயர்ச்சி அடைந்தார். தமிழகத்தில் உள்ள குரு தலம் மற்றும் கோவில்களில், சிறப்பு பூஜைகள் நடந்தன.கோவை கோட்டை மேட்டில் உள்ள, சங்கமேஸ்வரர் கோவிலில் சிறப்பு அலங்காரம், அபிஷேகம் உள்ளிட்ட பூஜைகள் நடந்தன. ராம்நகர் கோதண்ட ராமஸ்வாமி கோவில், வி.என்.தோட்டம் முத்துமாரியம்மன் கோவிலில் உள்ள குருபகவான் சன்னிதி, சாய்பாபா காலனி கே.கே.புதுார் பிரசன்ன மகா கணபதி கோவில்களில் குருபகவானுக்கு, சிறப்பு பூஜைகள் நடந்தன. திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.* கோவை நல்லாம்பாளையம் சாலையில் உள்ள, மாதா அமிர்தானந்த மயி மடத்தின் பிரம்மஸ்தான ஆலயத்தில், காலை 10:30 மணிக்கு, பிரதிஷ்டாதின சிறப்பு பூஜை நடந்தது. மாலை குருபெயர்ச்சி ஹோமம், சொற்பொழிவு, அர்ச்சனை, பஜனை, தீபாராதனை நடந்தன. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.