உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோவை டூ தானாப்பூருக்கு நாளை இரவு சிறப்பு ரயில்

கோவை டூ தானாப்பூருக்கு நாளை இரவு சிறப்பு ரயில்

கோவை;கோவையில் இருந்து பீகாரில் உள்ள தானாப்பூருக்கு, நாளை (21ம் தேதி) சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இரவு, 11:30 மணிக்கு புறப்படும் இந்த ரயில், 24ம் தேதி (புதன்) மதியம், 1:30க்கு தானாப்பூர் சென்றடையும்.கோவையில் இருந்து தானாப்பூருக்கு (பீகார்) ஒரு வழி சிறப்பு ரயில் (எண்: 06185), நாளை (21ம் தேதி, ஞாயிறு) இரவு, 11:30 மணிக்கு புறப்படுகிறது. திருப்பூருக்கு இரவு, 12:10க்கு சென்றடையும்; 12:50க்கு ஈரோடு; 1:47க்கு சேலம்; 4:00க்கு ஜோலார்பேட்டை செல்லும்.அதைத்தொடர்ந்து காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர், கூடூர், நெல்லுார், ஓங்கோல், விஜயவாடா, ராஜமுந்திரி, துவ்வாடா, விஜயநகரம், பொப்பிலி, பார்வதிபுரம், ராயகடா, முனிகுடா, திட்லகர், ஜார்கே சம்பல்பூர் பர்ககானா, ஹசாரிபாக், கோடெர்மா, கயா, ஜெகனாபாத் மற்றும் பாட்னா ஆகிய ஸ்டேஷன்களில் நின்று செல்லும். வரும், 24ம் தேதி (புதன்கிழமை) மதியம், 1:30 மணிக்கு தானாப்பூர் சென்றடையும் என, தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி