உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பா.ம.க., மாவட்ட செயலர் மீது மர்ம நபர்கள் திடீர் தாக்குதல்

பா.ம.க., மாவட்ட செயலர் மீது மர்ம நபர்கள் திடீர் தாக்குதல்

கோவை, :கோவை அவிநாசி ரோடு, நவஇந்தியா பகுதியில் வசிப்பவர் அசோக் ஸ்ரீநிதி, பா.ம.க.,கோவை மாவட்ட செயலர். இவர் அவிநாசி ரோட்டில் நிறுத்தி இருந்த காரை எடுக்க அதை நோக்கி நடந்து வந்தார். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த மூன்று பேர், தடுமாறி கீழே விழுவது போல நடித்தனர். அதை பார்த்த அசோக் ஸ்ரீநிதி, அவர்கள் உண்மையாக விழுந்து விட்டதாக நினைத்து உதவ சென்றார்.உடனே அந்த மூன்று பேரும் எழுந்து, அசோக் ஸ்ரீநிதியை தாக்கினர். அவர் கடைக்குள் திரும்பி ஓடிச்சென்றார். உடனே மூன்று பேரும் தப்பினர். அசோக் ஸ்ரீநிதி, ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் அளித்தார்.புகாரில், 'மைவி 3 ஆட்ஸ் மோசடிக்கு எதிராக நின்ற போது, எனக்கு கொலை மிரட்டல் வந்தது. தற்போது கொலை செய்ய முயற்சிக்கின்றனர். மூன்று பேரும் யார் என்பதை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' என தெரிவித்துள்ளார். ரேஸ்கோர்ஸ் போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !