பொள்ளாச்சி:பொள்ளாச்சி ஜவஹர் சிறுவர் மன்றத்தில் கோடைகால பயிற்சி முகாம் இன்று முதல் துவங்குகிறது.கோவை மண்டல கலை பண்பாட்டு மைய உதவி இயக்குனர் கோபாலகிருஷ்ணன் அறிக்கை:பள்ளிக்கல்வி பயிலும், ஐந்து வயது முதல், 16வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு கலைப்பயிற்சிகள் வழங்குதல், அவர்களின் கலைத்திறமைகளை வெளிக்கொணர்தல், கலைக்கல்வி வழங்குதல் ஆகியவற்றை முக்கிய நோக்கமாக கொண்டு, தமிழகம் முழுவதும் ஜவஹர் சிறுவர் மன்றங்கள் செயல்பட்டு வருகின்றன.கோவை மண்டலத்தின் கீழ் செயல்படும், பொள்ளாச்சி ஜவஹர் சிறுவர் மன்றத்தில், பரதநாட்டியம், குரலிசை, சிலம்பம் மற்றும் ஓவியம் ஆகிய கலைகள் மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்கப்படுகிறது.5 வயது முதல், 16 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு வாரந்தோறும் சனிக்கிழமைகளில், மாலை, 3:00 மணி முதல், 5:00 மணி வரையும், ஞாயிற்றுக் கிழமைகளில் காலை, 10:00 மணி முதல், 12:00 மணி வரையும் பயிற்சி அளிக்கப்படுகிறது.மாணவர்கள் கோடை விடுமுறையை பயனுள்ளதாக மாற்றும் வகையில், பொள்ளாச்சி மாரியம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், இன்று (1ம் தேதி) முதல், 10ம் தேதி வரை காலை, 10:00 மணி முதல் மதியம், 1:00 மணி வரை பரதநாட்டியம், குரலிசை, சிலம்பம், ஓவியம் ஆகிய கலைகளில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.மேலும், விபரங்களுக்கு, 97515 28188 என்ற மொபைல்போன் எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம். நிறைவு நாள் அன்று, பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு பயிற்சி சான்றிதழ்கள் வழங்கப்படும். இவ்வாய்ப்பினை மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.