உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி

ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி

தொண்டாமுத்தூர் : பேரூர் தாலுகா அலுவலகத்தில், ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர் பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணி நடந்தது.தமிழகத்தில், வரும் 19ம் தேதி, லோக்சபா தேர்தல் நடக்கிறது. இதற்காக, தேர்தல் ஆணையம் சார்பில், வாக்காளர் பட்டியல், பூத் சிலிப் வினியோகம், ஓட்டுச்சாவடி மையங்கள் தயார் படுத்தும் பணிகள், ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் தயார்படுத்தும் பணி, மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், பொள்ளாச்சி லோக்சபா தொகுதிக்குட்பட்ட, தொண்டாமுத்தூர் சட்டசபை தொகுதியில், மொத்தம், 312 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. தேர்தலுக்காக, பேரூர் தாலுகா அலுவலகத்தில், ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், ஓட்டுப்பதிவு இயந்திரங்களை தயார்படுத்தும் பணி, நேற்று நடந்தது. மொத்தம், 375 ஓட்டுப்பதிவு இயந்திரங்களில், வேட்பாளர் பெயர் மற்றும் சின்னம் அடங்கிய சீட் பொருத்தி, இயந்திரங்கள் சரியாக செயல்படுகிறதா என, பரிசோதனை செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை