உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ராம்நகரில் மாதக்கணக்கில் நிற்கிறது கார்: அந்த இடத்தில் ரோடு போடுவது யார்? கார்கள் மீது ஒரு கண் வைக்க வேண்டும் போலீசார்

ராம்நகரில் மாதக்கணக்கில் நிற்கிறது கார்: அந்த இடத்தில் ரோடு போடுவது யார்? கார்கள் மீது ஒரு கண் வைக்க வேண்டும் போலீசார்

கோவை;ராம் நகரில் ரோடு போடும் பணிகளுக்கு இடையூறாக நிற்கும் கார்களால், பணிகள் முழுமை பெறாத நிலை ஏற்பட்டுள்ளது; மணிக்கணக்கில் நிற்கும் கார்கள் மீது, போலீசார் 'கண்' வைக்க வேண்டும்.மாநகராட்சி, 67வது வார்டு ராம் நகர், அன்சாரி வீதி, தேசபந்து வீதி உள்ளிட்ட வீதிகளில் அதிகமான குடியிருப்புகள் இருப்பதுடன், 'கார் சர்வீஸ்', தொழில் நிறுவனங்களும் அதிகம் செயல்பட்டு வருகின்றன.தற்போது, அன்சாரி வீதியில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடந்துவருகின்றன. இப்பணிகள் முடிந்த தேசபந்து வீதியில், ரோடு போடப்பட்டு வருகிறது. இந்நிலையில், பணிகளுக்கு இடையூறாக இந்த வீதியில் நிறுத்தப்பட்டுள்ள கார்களால், பணிகளை முழுமையாக முடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.கார் நிறுத்தப்பட்ட இடத்தில் மட்டும், சதுர வடிவில் ரோடு போடாமல் விடுபட்டு பள்ளமாக மாறியுள்ளது. வேறுவழியின்றி, மற்ற இடங்களில் ரோடு போடும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. கேட்பாரற்று அனாதையாக நிற்கும் கார்களால், பணிகள் பாதிக்கப்படுகின்றன.ராம் நகர் பகுதிகளில், குறுகிய ரோடுகள் அதிகம் உள்ளன. அதேசமயம், குடியிருப்புகளுக்குள் நிறுத்தாமல், கார் உள்ளிட்ட வாகனங்களை, ரோட்டின் ஓரம் நிறுத்துவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் கார்கள் மீது மட்டுமின்றி, அனாதையாக பல மணி நேரம் நிற்கும் வாகனங்கள் மீதும், போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.கார் நிற்கும் இடத்தில் சாலை பணி நடக்காதது குறித்து, மாநகராட்சி மத்திய மண்டல உதவி கமிஷனர் செந்தில்குமரனிடம் கேட்டபோது, ''தேசபந்து வீதியில் நிறுத்தப்பட்டுள்ள கார் அகற்றப்பட்டு, விடுபட்ட இடத்தில் ரோடு போடப்படும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ