| ADDED : ஏப் 17, 2024 01:19 AM
கோவை,:''திராவிட இயக்கத்தை யாராலும் அழிக்க முடியாது,'' என, ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ பேசினார்.கோவை லோக்சபா தொகுதி தி.மு.க., வேட்பாளர் ராஜ்குமாரை ஆதரித்து ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ கோவை வி.கே.கே.மேனன் ரோட்டில், நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார்.அவர் பேசியதாவது:இருக்கும், 48 மணி நேரத்தை ஓட்டு சேகரிக்கும் பணியில் ஈடுபட வேண்டும். தமிழகம் விழித்தெழ வேண்டும். தமிழகம் முழுவதும் உணர்ச்சிகரமான அலை வீசிக்கொண்டுள்ளது. இண்டியா கூட்டணி 40 தொகுதிகளிலும், வெற்றி பெரும் என்பதை யாராலும் மாற்ற முடியாது.திராவிட இயக்கத்தை ஒழித்து விட்டு தான் மறுவேலை என்கிறார் பிரதமர் மோடி. ஒன்பது முறை தமிழகம் வந்துள்ளார் மோடி. திராவிட இயக்கம், 100 ஆண்டு கடந்த இயக்கம். சமூக நீதியை காக்க துவங்கப்பட்டது. அந்த இயக்கத்தை யாராலும் அழிக்க முடியாது. எதையும் திணிக்க முடியாது. தமிழக முதல்வர் ஸ்டாலின் பதவியேற்றதும் செயல்படுத்திய திட்டங்களை பலரும் பாராட்டுகின்றனர். பிரதமர் மோடி அவர் கூறிய பல திட்டங்களை நிறைவேற்றவில்லை. இவ்வாறு, அவர் பேசினார்.கூட்டத்தில், பல்வேறு கட்சிகளின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.