உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோவிலில் திருட முயன்றவர் பொதுமக்கள் தாக்கியதில் பலி

கோவிலில் திருட முயன்றவர் பொதுமக்கள் தாக்கியதில் பலி

சூலுார்:கோவை சூலுார் அடுத்த நடுப்பாளையத்தில் மாகாளியம்மன் கோவிலுக்குள், கடந்த 6ம் தேதி நள்ளிரவு நுழைந்த மர்ம நபர் உண்டியலை உடைக்க முயன்றார். அப்போது, அலாரம் அடித்தது. ஊரின் முக்கியமானவர்களுக்கு மொபைல் போன் அலாரமும் அடித்தது. இதனால், உஷாரான பொதுமக்கள், கோவில் முன் திரண்டனர். உண்டியலை உடைக்க முயன்ற நபரை பிடித்து சரமாரியாக தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த அவரை, கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், அந்த நபர் கோவை கோணவாய்க்கால் பாளையத்தை சேர்ந்த அப்துல் சலாம் மகன் சமீர், 27, என்பது தெரிந்தது. அவர் மீது போத்தனுார், சூலுார் ஸ்டேஷன்களில் திருட்டு மற்றும் கஞ்சா வழக்குகள் உள்ளன. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று காலை சமீர் உயிரிழந்தார்.இதையடுத்து, சூலுார் போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தியதில் நடுப்பாளையத்தை சேர்ந்த கனகராஜ், 40, துரைமுருகன், 37, பழனிவேல், 51, உள்ளிட்ட ஐந்து பேர், சமீரை தாக்கியது தெரிந்தது. அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், மூவரை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள கதிர்வேல், சந்துருவை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை