/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / விதிப்படி வேலை செய்யும் போராட்டம் ஊரக வளர்ச்சித்துறை துவக்கியது
விதிப்படி வேலை செய்யும் போராட்டம் ஊரக வளர்ச்சித்துறை துவக்கியது
அன்னுார்:ஊரக வளர்ச்சித் துறையில் தினமும் அதிகரித்து வரும் பணி நெருக்கடிகள், கள நிலைமைக்கு மாறாக, பணி முன்னேற்றங்களை மேற்கொள்ள வலியுறுத்தும் தவறான நிர்வாக நடவடிக்கைகளை கைவிட வலியுறுத்தியும், செப். 9ம் தேதி முதல் 20ம் தேதி வரை, விதிப்படி மட்டும் வேலை செய்வது என தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்கம் முடிவு செய்துள்ளது.இதன்படி காலை 10:00 மணி முதல் மாலை 5:45 மணி வரை மட்டுமே அலுவலகத்தில் பணிபுரிவோம். எந்த அறிக்கைகளுக்கும் பதில் வழங்காமல் புறக்கணிப்பது, பணி நேரத்துக்கு பிறகு நடத்தப்படும் ஆய்வுக் கூட்டம், கூகுள் மீட்டிங் ஆகிவற்றை புறக்கணிப்பது என முடிவு செய்துள்ளதாக மாவட்ட நிர்வாகிகள் தெரிவித்தனர்.இதன்படி அன்னுார் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று விதிப்படி மட்டும் பணி புரியும் போராட்டத்தில் அலுவலர்கள் ஈடுபட்டனர்.