உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஆசிரியர்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு :வாக்குவாதம் குளறுபடிகளால் இழுபறி

ஆசிரியர்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு :வாக்குவாதம் குளறுபடிகளால் இழுபறி

- நிருபர் குழு -அந்தந்த சட்டசபை தொகுதி ஓட்டுச்சாவடிகளில் பணிபுரிய உள்ள ஆசிரியர்களுக்கான இரண்டாம் கட்டப் பயிற்சி வகுப்பு, பொள்ளாச்சி மற்றும் உடுமலையில் நடந்தது.லோக்சபா தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் குறித்த விபரம், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பே பட்டியலிடப்பட்டு, அதன் அடிப்படையில் அவர்களுக்கு தேர்தல் பணி வழங்கப்பட்டுள்ளது.ஓட்டுச்சாவடி மையங்கள் மற்றும் ஓட்டு எண்ணும் மையங்களில் பணியாற்றுபவர்கள் என இருவகைப்படுத்தி, அவர்களுக்கு பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது.அவ்வகையில், பொள்ளாச்சி மகாலிங்கம் பொறியியல் கல்லுாரியில், பொள்ளாச்சி மற்றும் வால்பாறை சட்டசபை தொகுதி ஓட்டுச்சாவடிகளில் பணிபுரிய உள்ள ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு நடந்தது.தேர்தல் நடத்தும் அலுவலர் ஷர்மிளா, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கேத்திரின் சரண்யா, பயிற்சி முகாமினை பார்வையிட்டனர். பயிற்சியினை மண்டல அலுவலர்கள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் வழங்கினர். குறிப்பாக, இவிஎம் என்ற மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் பயன்படுத்தும் முறை குறித்து விளக்கப்பட்டது. தவிர ஓட்டுப்பதிவுக்கு முன், மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், தேர்தல் நடத்தை விதிகள் குறித்தும் தெரிவிக்கப்பட்டது.இதேபோல, மடத்துக்குளம் சட்டசபை தொகுதி ஓட்டுச்சாவடிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு உடுமலை ஜி.வி.ஜி., விசாலாட்சி பெண்கள் கல்லுாரியிலும், உடுமலை சட்டசபை தொகுதி ஓட்டுச் சாவடிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு வித்யாசாகர் கலை அறிவியில் கல்லுாரியிலும் பயிற்சி வகுப்பு நடந்தது.பயிற்சியில் ஓட்டுப்பதிவு இயந்திரத்தை கையாளுவது, ஓட்டுப் பதிவின்போது இயந்திரம் பழுதடைந்தால் சரிசெய்வது, வாக்காளர்களை அடையாளம் காண்பது, ஓட்டுப்பதிவு நிலை இரண்டு அலுவலர்களுக்கான பணிகள், கன்ட்ரோல் யூனிட்டை கையாளுவது குறித்து செயல்விளக்க பயிற்சி அளிக்கப்பட்டது.ஆனால், பயிற்சி வகுப்பில் பங்கேற்ற ஆசிரியர்கள் பலரும், முறையாக எந்தவொரு தகவல் விளக்கமும் அளிக்கப்படுவதில்லை என, புகார் தெரிவிக்கின்றனர்.இது குறித்து ஆசிரியர்கள் கூறியதாவது: பயிற்சி வகுப்பில், எவ்வித விளக்கமும் அளிக்கப்படவில்லை. ஊழியர்களிடம், 12 மற்றும் 12ஏ படிவங்களை மட்டும் எழுதி கையொப்பம் வாங்கி அனுப்பி விடுகின்றனர்.ஓரிரு வகுப்பறைகளில் மட்டும், தலைமை அலுவலர்களுக்கு மட்டும், 30 நிமிடங்கள் வரை பெயரளவிற்கு வீடியோக்கள் பதிவிட்டு காண்பிக்கப்படுகின்றன. அந்த வகுப்புகளில், பி.ஓ., 2 பி.ஓ., 3 அலுவலர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. உரிய முறையில் பயிற்சி வழங்கப்படாததால் ஓட்டுப்பதிவின்போது, பலரும் திணறுவர். இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ