உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பஸ் ஸ்டாப்பில்சேர் திருடிய திருடன்!

பஸ் ஸ்டாப்பில்சேர் திருடிய திருடன்!

தொண்டாமுத்தூர்;தொண்டாமுத்தூரில், பஸ் ஸ்டாப்பில் இருந்த சேரை திருடிய நபரை, பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.தொண்டாமுத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட, கெம்பனூர் ரோடு, பிருந்தாவன் ஹோம்ஸ் பஸ் ஸ்டாப் பகுதியில், பேரூராட்சி சார்பில் பஸ் ஸ்டாப் அமைக்கப்பட்டுள்ளது.நேற்று காலை, பஸ் ஸ்டாப்பில் இருந்த சேரை, மர்ம நபர் ஒருவர் திருடி தனது வேனில் ஏற்றிக் கொண்டிருந்தார். அவ்வழியாக சென்ற பொதுமக்கள், அந்நபரை பிடித்து, 'கவனித்து' தொண்டாமுத்தூர் போலீசில் ஒப்படைத்தனர். இதனையடுத்து, தொண்டாமுத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, அந்நபரை கைது செய்தனர்.விசாரணையில், அந்நபர் கவுண்டம்பாளையம், பாரதி காலனியை சேர்ந்த குமார்,27, என்பதும், இதுபோல பல இடங்களில், திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. தொண்டாமுத்தூர் போலீசார் அந்நபரிடம், விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை